பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு மதிப்பு இன்று வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 3ம் தேதி, பாரத ஸ்டேட் வங்கியின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியானது. அதன்படி, நிகர லாபத்தில் 35% வீழ்ச்சி பதிவாகி இருந்தது. வங்கியின் நிகர லாபம் 9164 கோடி அளவில் இருந்தது. ஆனால், அதை தொடர்ந்த நாட்களில் எஸ்பிஐ பங்குகள் 4% அளவில் உயர்ந்து, நேற்று வரலாற்று உச்ச பங்கு மதிப்பான 675.7 ரூபாயை எட்டியது. அத்துடன், எஸ்பிஐ வங்கியின் மொத்த சந்தை மதிப்பு 6 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்தியச் சந்தையில், 6 லட்சம் கோடி இலக்கை தாண்டும் இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக எஸ்பிஐ வரலாறு படைத்துள்ளது. முதலாவதாக எல்ஐசி இந்த இலக்கை தாண்டியது குறிப்பிடத்தக்கது.