இன்றைய பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வை பதிவு செய்துள்ளது. அநேக நிறுவனங்கள் இன்று ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் கிட்டத்தட்ட 10% வரை உயர்ந்து வர்த்தகம் ஆகின. மேலும், ஒரு வருட உச்சமாக, பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு பங்கு மதிப்பு 911 ரூபாய்க்கு வர்த்தகமானது. அதுமட்டுமின்றி, பாரத ஸ்டேட் வங்கியின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த கருத்து கணிப்பு முடிவுகளின் விளைவாக, பல்வேறு நிறுவனங்கள் இன்று மிகப்பெரிய ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கி ஒரு வருட உச்சத்தை பதிவு செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த நிதி ஆண்டில், பாரத ஸ்டேட் வங்கி சாதகமான முடிவுகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.














