தன் பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்கும் விதமான சட்ட உரிமை வழங்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், “நீதிமன்றங்கள் தாமாக இந்தியாவின் திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய முடியாது. இதற்கு நாடாளுமன்றங்களே பொறுப்பேற்று முடிவெடுக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தன் பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை வழங்க, சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு இந்த முக்கிய வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில், 4 விதமான தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கி உள்ளனர். இறுதியில், “சிறப்பு திருமண சட்டத்தில் நீதிமன்றங்கள் புதிதாக சரத்துகளை சேர்க்க முடியாது. எனவே, உச்சநீதிமன்றம் நேரடியாக இதில் தலையிடாது; நாடாளுமன்றங்கள் இது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்” என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தன் பாலின ஈர்ப்பாளர்களின் மனிதாபிமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய அரசால் தனி குழு ஒன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.