பாராளுமன்றத்தில் நேற்று மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய அரசின் பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதனை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் இதனை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார். மேலும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூறுகையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பாரபட்சமானது. இது மிகவும் ஆபத்தானது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று அறிவித்துள்ளார்.