பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சவுத் வசீரிஸ்தான் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படை தனித்தனியாக நடவடிக்கை எடுத்தது. சவுத் வசீரிஸ்தானில் சாராரோகா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், கார்ஜி தலைவரான கான் முகமது உட்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். லக்கி மார்வாத் பகுதியில் மற்றொரு சோதனையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதோடு, 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் கான் முகமது என்பவரும் ஒருவர். மேலும் அவரை பிடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.














