அமெரிக்காவின் சென்ஸ்ஹாக் நிறுவனத்தைக் கைப்பற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

September 6, 2022

சூரிய எரிசக்தி துறையில் முக்கிய சேவை வழங்குநரான அமெரிக்காவின் சென்ஸ்ஹாக் நிறுவனத்தின் 79.4% பங்குகளைக் கைப்பற்றும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கலிபோர்னியாவில், சூரிய எரிசக்தி துறை சார்ந்த மென்பொருள் மேலாண்மை கருவிகளை உருவாக்க, சென்ஸ்ஹாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், 15 நாடுகளைச் சேர்ந்த 140 வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு சென்ஸ்ஹாக் நிறுவனம் உதவியுள்ளது. குறிப்பாக, 600 இடங்களில், 100 ஜிகாவாட்டிற்கும் கூடுதல் திறன் கொண்ட எரிசக்தி நிலையங்கள் […]

சூரிய எரிசக்தி துறையில் முக்கிய சேவை வழங்குநரான அமெரிக்காவின் சென்ஸ்ஹாக் நிறுவனத்தின் 79.4% பங்குகளைக் கைப்பற்றும் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்
கையெழுத்திட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, கலிபோர்னியாவில், சூரிய எரிசக்தி துறை சார்ந்த மென்பொருள் மேலாண்மை கருவிகளை உருவாக்க, சென்ஸ்ஹாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில், 15 நாடுகளைச் சேர்ந்த 140 வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு சென்ஸ்ஹாக் நிறுவனம் உதவியுள்ளது. குறிப்பாக, 600 இடங்களில், 100 ஜிகாவாட்டிற்கும் கூடுதல் திறன் கொண்ட எரிசக்தி நிலையங்கள் அமைப்பதில் சென்ஸ்ஹாக் உதவியுள்ளது. எரிசக்தி நிலையங்கள் கட்டமைக்கப்படுவதற்கு முன்னர், அதற்கான நிலத் தரவுகள் மேலாண்மை, வடிவமைப்பு மேலாண்மை மற்றும் டாஷ்போர்டு உதவிகளை சென்ஸ்ஹாக் வழங்குகிறது. எரிசக்தி நிலையம் கட்டமைக்கப்படும் பொழுது, பொறியியல் தொடர்பான வரைபடங்கள் அமைப்பதற்கானத் தொழில்நுட்பச் சேவைகளை சென்ஸ்ஹாக் வழங்குகிறது. எரிசக்தி நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும் பொழுது, பராமரிப்பு அட்டவணை மற்றும் திறன் கண்காணிப்பு போன்ற மென்பொருள் சார்ந்த உதவிகளை இந்நிறுவனம் செய்கிறது. சென்ஸ்ஹாக் நிறுவனத்தின் டர்ன் ஓவர், கடந்த மூன்று ஆண்டுகளில், 2326369, 1165926, 1292063 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்த நிறுவனத்தின் 79.4% பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இது குறித்து பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, “வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், 100 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய எரிசக்தி மையங்களைச் செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக சென்ஸ்ஹாக் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து பணியாற்ற உள்ளது. எங்கள் நிறுவனத்தின் முதலீடுகள் மூலம் சென்ஸ்ஹாக் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம்” எனக் கூறினார். இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய சென்ஸ்ஹாக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்வரூப் மாவனூர், “ரிலையன்ஸ் நிறுவனத்துடனான இணைப்பு நம்பிக்கை அளிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu