பங்குச் சந்தையில் சரிவு - சென்செக்ஸ் 132 புள்ளிகள் வீழ்ச்சி

December 7, 2023

மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியால், கடந்த இரு அமர்வுகளாக பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவானது. ஆனால், இன்றைய தினம், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 132.04 புள்ளிகள் சரிந்து, 69521.69 ஆக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.55 புள்ளிகள் சரிந்து, 20901.15 ஆக உள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், […]

மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியால், கடந்த இரு அமர்வுகளாக பங்குச் சந்தையில் ஏற்றம் பதிவானது. ஆனால், இன்றைய தினம், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 132.04 புள்ளிகள் சரிந்து, 69521.69 ஆக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.55 புள்ளிகள் சரிந்து, 20901.15 ஆக உள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பவர் கிரிட், அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்லா, டைட்டன், ஈச்சர் மோட்டார்ஸ், என்டிபிசி, பி பி சி எல், அதானி எண்டர்பிரைசஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்றவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஓஎன்ஜிசி, அப்போலோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல், ஹிண்டால்கோ, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu