புதிய உச்சத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி

May 27, 2024

இன்றைய வர்த்தக நாளில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், 31 அமர்வுகளில் 76000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 23000 புள்ளிகளை இன்று தாண்டியது. ஆனால், இன்றைய நாளின் இறுதி நேர வர்த்தகத்தில், வீழ்ச்சி அடைந்து, சென்செக்ஸ் 75390.5 புள்ளிகளிலும், நிஃப்டி 22932.45 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டேவிஸ் லேப்ஸ், இண்டஸ் […]

இன்றைய வர்த்தக நாளில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், 31 அமர்வுகளில் 76000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 23000 புள்ளிகளை இன்று தாண்டியது. ஆனால், இன்றைய நாளின் இறுதி நேர வர்த்தகத்தில், வீழ்ச்சி அடைந்து, சென்செக்ஸ் 75390.5 புள்ளிகளிலும், நிஃப்டி 22932.45 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டேவிஸ் லேப்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, எச்டிஎப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், அதானி எண்டர்பிரைசஸ், விப்ரோ, கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி, எஸ் பி ஐ லைஃப், ஐ சி ஐ சி ஐ வங்கி, என்டிபிசி ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu