ஜி 20 மாநாடு நிறைவடைந்த பின்னர் நடைபெறும் முதல் வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தையில் கடும் ஏற்றம் பதிவாகியுள்ளது. முதல் முறையாக, தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 20000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் போது, சென்செக்ஸ் 540 புள்ளிகள் வரையில் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், வர்த்தக நாளின் இறுதியில் சற்று சரிவடைந்து, 528.17 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை 67127.08 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை 19996.35 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன
இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகள் கடும் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. கிட்டத்தட்ட 3% வரை உயர்வு பதிவு செய்யப்பட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். தனிப்பட்ட முறையில், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், நெஸ்ட்லே, மாருதி சுசுகி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டிஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, அப்போலோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ் பி ஐ போன்றவை ஏற்றமடைந்துள்ளன. அதே சமயத்தில், கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, எல் அண்ட் டி, பஜாஜ் பைனான்ஸ் போன்ற சில நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.