சிங்கப்பூரில் முதல் விற்பனையகத்தை தொடங்கியுள்ள டிவிஎஸ் நிறுவனம்

November 24, 2022

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம் சிங்கப்பூரில் தனது முதல் விற்பனையகத்தை தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள யு பி ஐ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில், ‘டிவிஎஸ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்’ என்ற பெயரில் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையகத்தில் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் போன்ற பிரீமியம் ரக வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அத்துடன், இந்த வாகனங்களுக்கான உபகரண பொருட்கள், உதிரி பாகங்கள் போன்றவை இங்கு விற்பனை செய்யப்பட உள்ளன. […]

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம் சிங்கப்பூரில் தனது முதல் விற்பனையகத்தை தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள யு பி ஐ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில், ‘டிவிஎஸ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்’ என்ற பெயரில் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையகத்தில் அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் அப்பாச்சி ஆர்டிஆர் போன்ற பிரீமியம் ரக வாகனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அத்துடன், இந்த வாகனங்களுக்கான உபகரண பொருட்கள், உதிரி பாகங்கள் போன்றவை இங்கு விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், வாகன சர்வீஸ் சேவையும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையகத்தை டிவிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் பிரிவு துணைத் தலைவர் ராகுல் நாயக் தொடங்கி வைத்தார். “டிவிஎஸ் நிறுவனம் சர்வதேச நாடுகளில் விரிவாக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன் பகுதியாக இந்த விற்பனையகம் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu