மீண்டும் 66000 புள்ளிகளை தொட்ட சென்செக்ஸ்

November 16, 2023

பங்குச் சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கம் மேலோங்கியது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 66000 புள்ளிகளை மீண்டும் தொட்டுள்ளது. ஆனால், இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தையில் சற்று சரிவு ஏற்பட்டதால், 65982.48 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19765.2 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இது நேற்றை விட 89.75 புள்ளிகள் உயர்வாகும். இன்றைய வர்த்தகத்தில், ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா,டிசிஎஸ், […]

பங்குச் சந்தையில் மீண்டும் காளையின் ஆதிக்கம் மேலோங்கியது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 66000 புள்ளிகளை மீண்டும் தொட்டுள்ளது. ஆனால், இன்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தையில் சற்று சரிவு ஏற்பட்டதால், 65982.48 புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்துள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 19765.2 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. இது நேற்றை விட 89.75 புள்ளிகள் உயர்வாகும்.
இன்றைய வர்த்தகத்தில், ஹீரோ மோட்டோகார்ப், டெக் மஹிந்திரா,டிசிஎஸ், ஹெச் சி எல் டெக், இன்போசிஸ், எல்டிஐ மைண்ட் ட்ரீ, டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், கோல் இந்தியா, டாடா கன்சியூமர், அதானி எண்டர்பிரைசஸ், ஐடிசி, சிப்லா, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்றவை சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu