பங்கு சந்தையில் புதிய உச்சம் பதிவானதை அடுத்து 930 புள்ளிகள் வீழ்ச்சி

December 20, 2023

இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை புதிய உச்சத்தை பதிவு செய்தன. ஆனால், இன்று மதியத்திற்கு பிறகு கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் 930.88 புள்ளிகளும், நிஃப்டி 302.95 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை 70506.31 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 21150.15 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன. இன்றைய வர்த்தகத்தில், ஓஎன்ஜிசி, டாடா கன்சியூமர், பிரிட்டானியா, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய […]

இன்று காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை புதிய உச்சத்தை பதிவு செய்தன. ஆனால், இன்று மதியத்திற்கு பிறகு கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை, மிகப்பெரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், சென்செக்ஸ் 930.88 புள்ளிகளும், நிஃப்டி 302.95 புள்ளிகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை 70506.31 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தை 21150.15 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளன.

இன்றைய வர்த்தகத்தில், ஓஎன்ஜிசி, டாடா கன்சியூமர், பிரிட்டானியா, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன. அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், யு பி எல், டாடா ஸ்டீல், கோல் இந்தியா, என்டிபிசி, பாரத ஸ்டேட் வங்கி, பவர் கிரிட், ரிலையன்ஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் அதில் அடங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu