செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிரான குற்றப் பத்திரிகையை அமலாக்க துறையினர் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதானே வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் காணொளி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். இதில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை மத்திய பிரிவில் பதிவான மூன்று வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையை தள்ளி வைக்க கேட்கும் செந்தில் பாலாஜி மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமலாக்க துறையினர் கூறியுள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணை பிப்ரவரி 15 இல் தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.