ஐதராபாத்தில் கார்டுகளை பயன்படுத்தி தங்கம் வாங்க தனி ஏடிஎம்

December 5, 2022

ஐதராபாத்தில் கார்டுகளை பயன்படுத்தி தங்கம் வாங்கும் ஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. நாட்டிலேயே முதல் தங்க ஏடிஎம் இயந்திரத்தை தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பொதுமக்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கம் வாங்கலாம். 99.99 சதவீத தூய்மையுடன் 0.5, 1,2,5,10,20,50 மற்றும் 100 கிராம் தங்க நாணயங்களை தங்க ஏடிஎம் மூலம் எடுக்கலாம். மேலும், தங்கத்தின் தரம் […]

ஐதராபாத்தில் கார்டுகளை பயன்படுத்தி தங்கம் வாங்கும் ஏடிஎம் இயந்திரம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

நாட்டிலேயே முதல் தங்க ஏடிஎம் இயந்திரத்தை தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூலம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பொதுமக்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் தங்கம் வாங்கலாம். 99.99 சதவீத தூய்மையுடன் 0.5, 1,2,5,10,20,50 மற்றும் 100 கிராம் தங்க நாணயங்களை தங்க ஏடிஎம் மூலம் எடுக்கலாம்.

மேலும், தங்கத்தின் தரம் மற்றும் உத்தரவாதம் குறித்த ஆவணங்களும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெலங்கானா மாநில மகளிர் ஆணைய தலைவர் சுனிதா லட்சுமரெட்டி கூறுகையில், ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கும் வசதி சாதாரண மக்களுக்கும், பெண்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu