பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டிக்கு இந்திய வீரர் வீராங்கனைகள் ஏழு பேர் தேர்வு

பாரிஸில் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டி நடைபெற உள்ளது.இதற்கான தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் ஏழு வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அதில் பி.வி.சிந்து, எச்.எஸ் பிரனாய், லக்ஷயா சென் ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் முறைப்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் சர்வதேச பேட்மிட்டன் சங்க வரிசையில் முதல் 16 இடங்களுக்குள் இருக்கும் […]

பாரிஸில் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டி நடைபெற உள்ளது.இதற்கான தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேட்மிட்டன் போட்டியில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் ஏழு வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். அதில் பி.வி.சிந்து, எச்.எஸ் பிரனாய், லக்ஷயா சென் ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் முறைப்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் சர்வதேச பேட்மிட்டன் சங்க வரிசையில் முதல் 16 இடங்களுக்குள் இருக்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தகுதி பெறுவார்கள். அதில் பிவி சிந்து 12 ஆவது இடத்தையும், பிரனோய் 9 ஆவது இடத்தையும், லக்ஷ்யா சென் 13-வது இடத்தையும் பிடித்து தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோல் ஆண்கள் இரட்டைப் பிரிவில் சாத்விக் சாய்ராம்- சிராக் செட்டி மூன்றாவது இடத்தை பிடித்து தகுதி பெற்றுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் தனீஷா கிராஸ்டோ - அஸ்வினி பொன்னப்பா ஆகியோர் 13 வது இடம் பிடித்தும் தகுதி பெற்றுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu