கழிவுநூற்பாலைகள் வேலை நிறுத்தம்

November 7, 2023

கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் மில்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் நூற்பாலைகள் எனும் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மைல்கள் இயங்கி வருகின்றன. இதில் கோவை திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன. இதிலிருந்து சுமார் தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகள் என்று சுமார் 15 லட்சத்திற்கும் மேலாக […]

கழிவு பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் மில்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் நூற்பாலைகள் எனும் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மைல்கள் இயங்கி வருகின்றன. இதில் கோவை திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 400 ஆலைகள் உள்ளன. இதிலிருந்து சுமார் தினமும் 25 லட்சம் கிரே நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவை தவிர பிளாஸ்டிக் பாட்டில், பனியன் கம்பெனி கழிவுகள் என்று சுமார் 15 லட்சத்திற்கும் மேலாக கலர் நூல்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைந்து வருகின்றார்கள். இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, கழிவு பஞ்சின் விலையை குறைக்க வலியுறுத்தி இன்று முதல் இந்த நூற்பாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினமும் 40 லட்சம் கிலோ நூல் உற்பத்தி நிறுத்தப்பட்டு 60 கோடி ரூபாய் உற்பத்தி வருவாய் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu