சர்வதேச நாடுகள் பங்குபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இந்தியா தலைமையில் இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இதனை தொகுத்து வழங்குகிறார். இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் சபாஷ் ஷரீஃப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். பாகிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உக்ரைன் ரஷ்யா போர், இந்தியா சீனா எல்லை பிரச்சனை போன்றவற்றுக்கு நடுவே, அந்தந்த நாட்டின் தலைவர்கள் ஒருங்கிணைந்து இந்த கூட்டத்தில் பங்கு பெறுவது உலகத்தின் கவனத்தை குவித்துள்ளது.
இந்த மாநாட்டின் கருப்பொருளாக 'பாதுகாப்பு' சொல்லப்பட்டுள்ளது. பொருளாதாரம், வர்த்தகம், இறையாண்மை, ஒருமைப்பாடு, பரஸ்பர மரியாதை, சுற்றுச்சூழல் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நாட்டின் பாதுகாப்பு குறித்து உலக தலைவர்கள் இதில் கலந்துரையாடுகின்றனர். இதில் பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாத எதிர்ப்பு குறித்து பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் பேசியது கவனம் பெற்றுள்ளது.