ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை - சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்வு

September 6, 2023

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தொடக்க நேரத்தில் சிறிய அளவிலான மாறுதல்களுடன் நடைபெற்று வந்த வர்த்தகம், மதியம் 12.30 மணிக்கு பிறகு கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. ஆனால், பிற்பகல் 3 மணிக்கு பிறகு எழுச்சி பெற்று, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 100.26 புள்ளிகள் உயர்ந்து, 65880.52 புள்ளிகளாக உள்ளது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.15 […]

இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. தொடக்க நேரத்தில் சிறிய அளவிலான மாறுதல்களுடன் நடைபெற்று வந்த வர்த்தகம், மதியம் 12.30 மணிக்கு பிறகு கடும் சரிவை சந்திக்க தொடங்கியது. ஆனால், பிற்பகல் 3 மணிக்கு பிறகு எழுச்சி பெற்று, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 100.26 புள்ளிகள் உயர்ந்து, 65880.52 புள்ளிகளாக உள்ளது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 36.15 புள்ளிகள் உயர்ந்து, 1961105 புள்ளிகளாக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், டாடா கன்ஸ்யூமர் ஏற்றமடைந்துள்ளது. ஹால்டிராம் நிறுவனத்தை டாடா கன்ஸ்யூமர் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த ஏற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர, டேவிஸ் லேப்ஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டிஸ், அப்போலோ ஹாஸ்பிடல், ஹெச்டிஎஃப்சி வங்கி, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களும் ஏற்றம் அடைந்துள்ளன. அதே சமயத்தில், ஆக்சிஸ் வங்கி, ஹிந்தால்கோ, டாடா ஸ்டீல், என் டி பி சி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எஸ் பி ஐ, மாருதி சுசுகி, எல்டிஐ மைண்ட் ட்ரீ ஆகிய நிறுவனங்கள் சரிவை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu