இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 616.75 புள்ளிகள் சரிந்து 73502.64 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 160.9 புள்ளிகள் சரிந்து 22332.65 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. நிஃப்டி குறியீட்டு எண் 22000 புள்ளிகளுக்கு மேல் உள்ள வரையில் பயப்படத் தேவையில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அப்பல்லோ ஹாஸ்பிடல், நெஸ்லே, எஸ் பி ஐ லைஃப், சிப்லா, பஜாஜ் பின்செர்வ், டாக்டர் ரெட்டீஸ், பிரிட்டானியா, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாடா கன்சியூமர், பஜாஜ் ஆட்டோ, பவர் கிரிட், டாடா ஸ்டீல், எஸ் பி ஐ, ஓ என் ஜி சி, இன்டஸ் இன்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ,ஐ சி ஐ சி ஐ வங்கி, ஐடிசி, ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.