ஷேக் ஹசீனாவுக்கு நிரந்தர அடைக்கலம் வழங்க இந்தியா தயக்கம்

August 7, 2024

ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்கு தப்பி வந்துள்ளார். இந்திய விமானப்படையின் கருடா பிரிவு வீரர்களின் பாதுகாப்பில், ரகசிய இடத்தில் அவர் தங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், அவர் இந்தியாவில் தற்காலிகமாக தங்கி இருக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கி இருப்பது பற்றி மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், ஓரிரு நாட்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தில் சுதந்திரப் […]

ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் டெல்லிக்கு தப்பி வந்துள்ளார். இந்திய விமானப்படையின் கருடா பிரிவு வீரர்களின் பாதுகாப்பில், ரகசிய இடத்தில் அவர் தங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில், அவர் இந்தியாவில் தற்காலிகமாக தங்கி இருக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் நிரந்தரமாக தங்கி இருப்பது பற்றி மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை எனவும், ஓரிரு நாட்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பாக போராட்டம் நிகழ்ந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா தப்பி வந்துள்ளார். தற்போது, அவரது எதிர்ப்பாளர்கள் வங்கதேசத்தில் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்கும் பட்சத்தில், வங்கதேசத்துடன் கொள்கை ரீதியான சிக்கல்கள் நேரலாம் என இந்திய அரசு கருதுகின்றது. எனவே, அவருக்கு நிரந்தர அடைக்கலம் வழங்குவதில் தயக்கம் காட்டி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu