பிரபல தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான சீமென்ஸ், தனது 5ஜி ரௌட்டர் கருவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
உற்பத்தி துறையின் தேவைகளுக்கு ஏற்றவாறு, கட்டமைக்கப்படும் வகையில், 5ஜி தொழில்நுட்பம் உள்ளது. அந்த வகையில், 5ஜி தொழில்நுட்ப பயன்பாட்டை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சீமென்ஸ் நிறுவனத்தின் 5ஜி ரௌட்டர்கள், இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
சீமென்ஸ் நிறுவனம் சார்பில் MUM856-1 மற்றும் MUM853-1 ஆகிய 5ஜி ரௌட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மொபைல் பிராட்பேண்ட் பரிமாற்றம் மற்றும் நம்பகமான இயந்திர வகை தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரௌட்டர்கள், 5ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் 3ஜி நெட்வொர்க்களுடன் இணையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், MUM856-1 ரௌட்டர், 1000 எம்பிபிஎஸ் தரவிறக்க வேகமும், 500 எம்பிபிஎஸ் பதிவேற்ற வேகமும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.