மும்பையில் நடந்த இந்திய கண்டுபிடிப்பு தின நிகழ்ச்சியில் சீமென்ஸ் தனது புதிய டிஜிட்டல் வணிக தளமான எக்ஸ்செலரேட்டர்- ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமென்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பீட்டர் கோர்டே, சீமென்ஸ் எக்ஸ்செலரேட்டர் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் டிஜிட்டல் மாற்றத்தில் வடிவமைக்கப்பட்டது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் மாற்றம் மற்றும் மதிப்பு உருவாக்கத்தை விரைவுபடுத்துவதே எக்ஸ்செலரேட்டர் -இன் குறிக்கோள் ஆகும் . மேலும் இது செயலாக்க திறன்களுடன் ௯டிய மென்பொருள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது என்று கூறினார். அதாவது பணப்பரிமாற்ற பிரச்சினையை களைந்து பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே நிறுவனத்தின் நோக்கம் என்றும் கூறினார். அதேநேரம் சீமென்ஸின் 5.9 பில்லியன் R&D பட்ஜெட்டில் பாதி டிஜிட்டல் மயமாக்க செலவழிக்கப்படும் என்றும் அதன்மூலம் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் எளிதாகும் என்று கூறினார். எனவே உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.














