சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா - 25900 பேர் பாதிப்பு

May 20, 2024

சிங்கப்பூரில் சமீப காலத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவிக் கொண்டு வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை புதிதாக 25 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது. தினந்தோறும் சராசரியாக 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் […]

சிங்கப்பூரில் சமீப காலத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது மீண்டும் கொரோனா பரவிக் கொண்டு வருகிறது. கடந்த ஐந்தாம் தேதி முதல் 11ஆம் தேதி வரை புதிதாக 25 ஆயிரத்து 900 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது. தினந்தோறும் சராசரியாக 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மூன்று பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்நாடு அரசு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை மந்திரி ஆங் எ குங்க் கூறுகையில், நாம் கொரோனாவுடன் வாழ்வதற்கு பழக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கொரோனா பரவல் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பிற்காக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu