அவதூறு வழக்கில் சிங்கப்பூா் பிரதமரின் சகோதரா் இழப்பீடு வழங்க உத்தரவு

November 29, 2023

சிங்கப்பூரில் உள்ள தமிழ் வம்சாவளி அமைச்சர்கள் மீது சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு பிரதமர் லி சிஎன் லுங்கின் இளைய சகோதரர் லி சி யாங் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூர் சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் கே சண்முகம், வெளியூர் அமைச்சர் விவின் பாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து பங்களாக்கள் வாடகை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், இவர்கள் ஆதாயம் பெற்றதாகவும் […]

சிங்கப்பூரில் உள்ள தமிழ் வம்சாவளி அமைச்சர்கள் மீது சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக தொடரப்பட்ட வழக்கில் அந்நாட்டு பிரதமர் லி சிஎன் லுங்கின் இளைய சகோதரர் லி சி யாங் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர் சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் கே சண்முகம், வெளியூர் அமைச்சர் விவின் பாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் சிங்கப்பூர் நில ஆணையத்திடமிருந்து பங்களாக்கள் வாடகை பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், இவர்கள் ஆதாயம் பெற்றதாகவும் சமூக தளமான பேஸ்புக்கில் கடந்த ஜூலை மாதம் கூறினார். இவர் பிரிட்டனில் வசித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறி இரு அமைச்சர்களும் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் இவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் யாங் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து இரு அமைச்சர்களுக்கும் அவர இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த தொகை எவ்வளவு என்பது விசாரணையின்போது தெரிவிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதோடு இரு அமைச்சர்கள் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை வெளியிட யாங்கிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu