சிங்கப்பூர் பிரதமராக லாரன்ஸ் வாங் பதவியேற்பு

May 16, 2024

சிங்கப்பூரின் பிரதமராக துணை பிரதமர் லாரன்ஸ் வாங் பொறுப்பேற்றுக்கொண்டார். சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 51. இவர் இதுவரை நாட்டின் துணை பிரதமராக இருந்தார். சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் ஓய்வு பெற விரும்பியதையடுத்து இவர் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லீ சியென் சுமார் 20 ஆண்டுகாலம் பதவியில் இருந்தார். இந்த இரண்டு பேரும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்தவர்கள். இந்த கட்சி 50 ஆண்டுகளுக்கும் […]

சிங்கப்பூரின் பிரதமராக துணை பிரதமர் லாரன்ஸ் வாங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 51. இவர் இதுவரை நாட்டின் துணை பிரதமராக இருந்தார். சிங்கப்பூரின் பிரதமர் லீ சியென் ஓய்வு பெற விரும்பியதையடுத்து இவர் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லீ சியென் சுமார் 20 ஆண்டுகாலம் பதவியில் இருந்தார். இந்த இரண்டு பேரும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்தவர்கள். இந்த கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேல் சிங்கப்பூரில் ஆட்சி செலுத்தி வருகிறது. சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். அவர் நேற்று பிரதமருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பிரதமர் லாரன்ஸ் நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவர் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராவார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu