தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டதை போல நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள், முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அட்டவணை அடுத்த மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் சுமுகமான சூழல் எப்போது காணப்படும். எனவே தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது வழக்கில் உள்ளது. அதேபோன்று இந்த முறையும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது.