அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்தியானந்தாவின் கைலாசா

March 18, 2023

அமெரிக்காவைச் சேர்ந்த 30 நகரங்களை ஏமாற்றியதாக நித்தியானந்தாவின் கைலாசா நாடு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் ஐ நா சபையில் பேசியது உள்ளிட்ட செய்திகள் அண்மையில் வெளியானது. இதனால், கைலாசா நாட்டை ஐ நா சபை அங்கீகரித்தது போல தோற்றம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் அமைப்பு அளித்த விளக்கத்தில், “எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை பேச மனித உரிமைகள் அமைப்பு அனுமதிக்கிறது” என்பது தெரிய […]

அமெரிக்காவைச் சேர்ந்த 30 நகரங்களை ஏமாற்றியதாக நித்தியானந்தாவின் கைலாசா நாடு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நித்தியானந்தா உருவாக்கிய கைலாசா நாட்டின் பிரதிநிதிகள் ஐ நா சபையில் பேசியது உள்ளிட்ட செய்திகள் அண்மையில் வெளியானது. இதனால், கைலாசா நாட்டை ஐ நா சபை அங்கீகரித்தது போல தோற்றம் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் அமைப்பு அளித்த விளக்கத்தில், “எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை பேச மனித உரிமைகள் அமைப்பு அனுமதிக்கிறது” என்பது தெரிய வந்துள்ளது. எனவே, நித்தியானந்தா இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதே வேளையில், ‘சிஸ்டர் சிட்டிஸ்’ எனப்படும் கலாச்சார பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் அமெரிக்காவின் நகரங்களுக்கும் கைலாசா நாட்டிற்கும் இடையே கையெழுத்தானது. இந்நிலையில், கைலாசா என்பது அங்கீகரிக்கப்பட்ட நாடு அல்ல என்பதை உறுதி செய்து, இந்த ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நித்தியானந்தா, ‘கைலாசா’ என்ற போலி நாடு மூலம், கிட்டத்தட்ட 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu