தமிழகத்தின் தற்போதைய தலைமை செயலாளர் வெ. இறையன்புவின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் 49 வது தலைமை செயலாளர் ஆக இருப்பார். இன்று, இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
கடந்த 1989 ஆம் ஆண்டு குடிமை பணியில் சேர்ந்த சிவ்தாஸ் மீனா, தற்போதைய நிலையில், தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் - நீர் வழங்கல் துறையின் கூடுதல் பொறுப்பு தலைமை செயலாளராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், காஞ்சிபுரம், வேலூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஆட்சிப் பணியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 தனிப்பட்ட செயலாளர்களில் இவரும் ஒருவராக இருந்து வந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.