வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி - விரைவில் அறிமுகம்

April 13, 2023

நேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், ரயில்வே துறை, விரைவில் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், படுக்கை வசதி கொண்ட 80 பெட்டிகளுக்கு ஆர்டர்களை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. வந்தே பாரத் ரயில்களுக்கான படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தயாரிப்புக்கு, பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் - BHEL மற்றும் Titagarh Wagons […]

நேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், ரயில்வே துறை, விரைவில் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், படுக்கை வசதி கொண்ட 80 பெட்டிகளுக்கு ஆர்டர்களை பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளது.

வந்தே பாரத் ரயில்களுக்கான படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் தயாரிப்புக்கு, பாரத் ஹெவி எலக்ட்ரிக்ஸ் லிமிடெட் - BHEL மற்றும் Titagarh Wagons ஆகிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், ரயில்வே வரலாற்றில் இது மிகப்பெரிய டென்டர்களுள் ஒன்றாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி, அடுத்த 35 ஆண்டுகளுக்கு, படுக்கை வசதி பெட்டிகளை இந்த இரு நிறுவனங்கள் பராமரிக்க உள்ளன. 80 ரயில்களுக்கான ஆர்டர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு ரயிலுக்கான விலை 120 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த தொகையில், வரிகள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu