பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் 5 கிலோ ஹெராயின் கடத்தல்

January 23, 2023

பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் 5 கிலோ ஹெராயின் கடத்தப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் கக்கர் கிராமம் வழியாக பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அமிர்தசரஸ் போலீசாரும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் கூட்டாக சேர்ந்து அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர். அதிலிருந்து 5 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானத்தை 12 […]

பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் 5 கிலோ ஹெராயின் கடத்தப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசின் கக்கர் கிராமம் வழியாக பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் மூலம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அமிர்தசரஸ் போலீசாரும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் கூட்டாக சேர்ந்து அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.

அதிலிருந்து 5 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானத்தை 12 சுற்றுகள் சுட்டதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட டிரோனின் பாகங்கள் அமெரிக்கா, சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் பஞ்சாப் காவல்துறை அதிகாரி கௌரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu