பேடிஎம் நிறுவனத்தின் 2% பங்குகளை விற்ற சாஃப்ட்பேங்க்

May 11, 2023

சாஃப்ட் பேங்க் நிறுவனம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளது. இந்நிலையில், செபியின் ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டி, சாஃப்ட்பேங்க், 2.07% பேடிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளது. ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 13103148 பொது பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல், மே 8ம் தேதி வரை இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மே 8ம் தேதி அன்று, 2% விளிம்பை தாண்டி பங்கு […]

சாஃப்ட் பேங்க் நிறுவனம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளது. இந்நிலையில், செபியின் ஒழுங்கு முறைகளை பின்பற்ற வேண்டி, சாஃப்ட்பேங்க், 2.07% பேடிஎம் பங்குகளை விற்பனை செய்துள்ளது.

ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் 13103148 பொது பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல், மே 8ம் தேதி வரை இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மே 8ம் தேதி அன்று, 2% விளிம்பை தாண்டி பங்கு விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், செபியின் ஒழுங்குமுறை 29(2) பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சாஃப்ட் பேங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பங்கு விற்பனைக்குப் பிறகு, சாஃப்ட் பேங்க் வசம் இருந்த 13.24% பேடிஎம் பங்குகள், 11.17% ஆக சரிந்துள்ளது. பங்கு விற்பனையின் மொத்த தொகை தெரிவிக்கப்படவில்லை. ஆனால், 120 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu