ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர் சாஃப்ட் பேங்க் ஆகும். இந்த நிறுவனம், கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபர்ஸ்ட் க்ரை பங்குகளை விற்பனை செய்துள்ளது. விரைவில் ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் ஐபிஓ வெளியாக உள்ள நிலையில், இந்த பங்கு விற்பனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், சாஃப்ட் பேங்க் விற்பனை செய்த பங்குகளை முக்கிய பிரபலங்கள் வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஃபர்ஸ்ட் க்ரை நிறுவனத்தின் பங்குகளை முக்கிய பிரபலங்கள் வாங்கியுள்ளது, அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மானியவார் ஆடை நிறுவன தலைவர் ரவி மோடி, இன்போசிஸ் இணை தோற்றுனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் டிவிஎஸ் குழுமம் போன்ற முக்கிய நபர்கள் அந்த பட்டியலில் உள்ளனர். எனவே, ஃபர்ஸ்ட் க்ரை ஐபிஓ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.