அலிபாபா பங்குகளை விற்கும் சாஃப்ட்பேங்க்

April 13, 2023

ஜப்பானை சேர்ந்த பிரபல முதலீட்டு வங்கியான சாஃப்ட்பேங்க், அலிபாபா குழுமத்தில் தனக்கு இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, அலிபாபா குழுமத்தில் சாஃப்ட் பேங்க் வைத்திருந்த பங்குகள் சில விற்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள பங்குகளையும் சாஃப்ட் பேங்க் விற்பதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியானதிலிருந்து, அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 5.1% வரை சரிந்துள்ளன. அதே வேளையில், சாஃப்ட் பேங்க் பங்குகள் ஏற்ற இறக்கங்கள் இன்றி வர்த்தகமாகி வருகிறது. நேற்று வெளியான பிரிட்டன் செய்திக் […]

ஜப்பானை சேர்ந்த பிரபல முதலீட்டு வங்கியான சாஃப்ட்பேங்க், அலிபாபா குழுமத்தில் தனக்கு இருக்கும் அனைத்து பங்குகளையும் விற்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே, அலிபாபா குழுமத்தில் சாஃப்ட் பேங்க் வைத்திருந்த பங்குகள் சில விற்கப்பட்டுள்ளன. இந்நிலையில், எஞ்சியுள்ள பங்குகளையும் சாஃப்ட் பேங்க் விற்பதாக தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியானதிலிருந்து, அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் 5.1% வரை சரிந்துள்ளன. அதே வேளையில், சாஃப்ட் பேங்க் பங்குகள் ஏற்ற இறக்கங்கள் இன்றி வர்த்தகமாகி வருகிறது.

நேற்று வெளியான பிரிட்டன் செய்திக் குறிப்பு ஒன்றில், பங்குகள் விற்பனைக்கு பிறகு, சாஃப்ட் பேங்க் இடம் வெறும் 3.8% பங்குகள் மட்டுமே இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு, 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அலிபாபா பங்குகளை சாஃப்ட் பேங்க் விற்றுள்ளது. இதன் மூலம், 34 பில்லியன் டாலர்கள் லாபத்தை சாஃப்ட் பேங்க் பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில், ஏற்கனவே சரிந்து வரும் அலிபாபா குழுமத்திற்கு, சாஃப்ட் பேங்கின் அறிவிப்பு மேலும் பின்னடைவை தந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu