சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் மின் உற்பத்தி பொருத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.சென்னையில் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரை, சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மின்சாரங்கள் மின்சார வாரியத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றனர். இங்கு சோலார் தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. இதற்காக 6.4 மெகாவாட் அளவுக்கு சோலார் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மெட்ரோ ரயில் நிலைய மேற்கூரையில் சோலார் தகடுகள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான திட்டங்கள் முழுவதும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. மின் உற்பத்தி தொடர்பாக இரண்டு டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே சோலார் மின் உற்பத்தி மூலம் இதுவரை 6 கோடி வரை மின் கட்டணம் மிச்சமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.