எரிமலையின் சீற்றம் தணிந்ததால், பாலி தீவுக்கு குவான்டஸ், ஜெட்ஸ்டார், விர்ஜின், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானங்கள் சேவையைத் தொடங்கின.
இந்தோனேசியாவின் பசிபிக் நெருப்பு வளையத்தில் உள்ள எரிமலைகளில் லெவோடோபி லாகி-லாகி எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 10 பேர் உயிரிழந்து, பலர் படுகாயம் அடைந்தனர். எரிமலையின் புகை 9 கி.மீ. உயரம் பறந்து, விமான சேவைக்கு அச்சுறுத்தலாக மாறியது. இதனால், பாலி நகரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பறக்கும் விமானங்கள் ரத்து செய்யபட்டன. ஏற்கனவே விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். இந்தியாவிலிருந்து இயக்கப்படும் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இன்று, எரிமலையின் சீற்றம் தணிந்தபின், குவான்டஸ், ஜெட்ஸ்டார், விர்ஜின், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்கூட் விமானங்கள் சேவையைத் தொடங்கின. பாலியில் சிக்கிய பயணிகள் கருடா இந்தோனேசியா விமானங்களில் டிக்கெட்டை வாங்கி நாடு திரும்ப முயற்சிக்கின்றனர்.