கோழிக்கோடு துபாய் இடையே விரைவில் கப்பல் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு மக்கள் வேலைகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் பெண்கள் உட்பட்ட பலர் பயணம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் தங்கள் பயணத்திற்கு விமான சேவையை மட்டுமே நம்பியுள்ளனர். இந்த நிலையில் விமான டிக்கெட் உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சனைகளால் இவர்களது பயணம் பாதித்து வருகிறது. இதனை கணக்கில் கொண்டு கேரளாவில் இருந்து கொச்சி வழியாக கப்பல் சேவை தொடங்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடல்சார் வாரிய தலைவர் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் ஆதரவு அளித்தால் விரைவில் கப்பல் சேவை தொடங்க இயலும் எனவும், இதற்கான டெண்டர் ஜனவரி மாதத்தில் கோரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் தொழில் முனைவோர் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன் உள்ள நிறுவனங்கள் டென்டரில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆயிரம் முதல் 2000 பயணிகள் சொல்லக்கூடிய வகையில் இருப்பதாகவும், 5 நாட்கள் பயணம் செய்ய இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.