தென் கொரிய தேர்தலில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி

April 12, 2024

தென்கொரிய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. கடந்த புதன்கிழமை தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற இடங்களில் ஜனநாயக கூட்டணி 176 இடங்களை கைப்பற்றியது. தற்போதைய அதிபர் யூனூசுக் கின் மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 108 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மற்றொரு மிதவாத கட்சியான கொரியா மறுகட்டமைப்பு கட்சிக்கு 12 இடங்கள் கிடைத்துள்ளன. இதை அடுத்து தென் கொரிய நாடாளுமன்றத்தில் மிதவாத கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தல் […]

தென்கொரிய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன.

கடந்த புதன்கிழமை தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 300 நாடாளுமன்ற இடங்களில் ஜனநாயக கூட்டணி 176 இடங்களை கைப்பற்றியது. தற்போதைய அதிபர் யூனூசுக் கின் மக்கள் சக்தி கட்சிக்கு வெறும் 108 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மற்றொரு மிதவாத கட்சியான கொரியா மறுகட்டமைப்பு கட்சிக்கு 12 இடங்கள் கிடைத்துள்ளன. இதை அடுத்து தென் கொரிய நாடாளுமன்றத்தில் மிதவாத கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளது. இந்தத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஹான் டக்சு மற்றும் அவருடைய ஆலோசகர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஹான் டோன் ஹூணும் பதவி விலகுவதாக கூறியுள்ளார். இதனால் அதிபர் யூன் சுக் இயோலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu