தென் கொரியாவில் 4.8 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிட்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாக பதிவாகியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது பூமிக்கு அடியில் எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இது வரை வெளியாகவில்லை. ஜியோலா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் மக்கள் இந்த நடுக்கத்தினை உணர்ந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. தென்மேற்கு பகுதியான புவானில் இந்த நிலநடுக்கத்தினால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் ஜன்னல்கள் உடைந்து கீழே விழும் அளவுக்கு இருந்தது என்று தென்கொரியாவின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் தென்கொரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். வடக்கு ஜியோலா மாகாண தீயணைப்பு துறைக்கு மக்களிடமிருந்து 80-கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.














