தென்கொரிய அதிபர் பதவி நீக்கம்: ஜூன் 3ஆம் தேதி புதிய தலைவர் தேர்தல்

April 9, 2025

தென்கொரியாவில் வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தென்கொரியாவில் ராணுவ அவசர நிலையை செயல்படுத்தியதற்காக, அந்நாட்டின் அதிபர் யூன் சுக்-இயோ எதிர்ப்பு போராட்டங்களுக்குள்ளானார். இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அவர் பதவி நீக்கப்பட்டார். கடந்த வாரம் அரசியலமைப்பு நீதிமன்றமும் இந்த தீர்மானத்தை உறுதி செய்தது. தென்கொரிய அரசியலமைப்பின்படி, அதிபர் பதவி நீக்கப்பட்டால், 2 மாதத்துக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டியது கட்டாயம். இதனையடுத்து, இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ, வரும் […]

தென்கொரியாவில் வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

தென்கொரியாவில் ராணுவ அவசர நிலையை செயல்படுத்தியதற்காக, அந்நாட்டின் அதிபர் யூன் சுக்-இயோ எதிர்ப்பு போராட்டங்களுக்குள்ளானார். இதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அவர் பதவி நீக்கப்பட்டார். கடந்த வாரம் அரசியலமைப்பு நீதிமன்றமும் இந்த தீர்மானத்தை உறுதி செய்தது.

தென்கொரிய அரசியலமைப்பின்படி, அதிபர் பதவி நீக்கப்பட்டால், 2 மாதத்துக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டியது கட்டாயம். இதனையடுத்து, இடைக்கால அதிபர் ஹான் டக்-சூ, வரும் ஜூன் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu