லெஜண்ட்ஸ் லீக்கில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி

இந்தியாவில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது. லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், கோனார்க் சூர்யாஸ் மற்றும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் கோனார்க் அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக, சதர்ன் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து. அதில் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் மசாகசா 58 பந்தில் 83 ரன்கள் அடித்து […]

இந்தியாவில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றது.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், கோனார்க் சூர்யாஸ் மற்றும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் கோனார்க் அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக, சதர்ன் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து. அதில் முன்னாள் ஜிம்பாப்வே வீரர் மசாகசா 58 பந்தில் 83 ரன்கள் அடித்து அசத்தினார். கோனார்க் அணியின் யூசுப் பதான் 38 பந்தில் 85 ரன்கள் எடுத்தார். இறுதியில், இரு அணிகளும் 164 ரன்களை அடித்து சமனில் முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து சூப்பர் ஓவர் முறையில் சதர்ன் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu