குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைவதாக டிட்கோ அறிவிப்பு

குலசேகரப்பட்டினத்தில் 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைய உள்ளதாக தமிழ்நாடு தொழிலக வளர்ச்சி கழகம் - டிட்கோ அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவுக்கான இரண்டாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 2233 ஏக்கர் பரப்பளவில், 950 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ சார்பில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரோவின் இன் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில், ராக்கெட் ஏவுதளத்துக்கு அருகிலேயே […]

குலசேகரப்பட்டினத்தில் 1500 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைய உள்ளதாக தமிழ்நாடு தொழிலக வளர்ச்சி கழகம் - டிட்கோ அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவுக்கான இரண்டாவது ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 2233 ஏக்கர் பரப்பளவில், 950 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ சார்பில் இந்த ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரோவின் இன் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில், ராக்கெட் ஏவுதளத்துக்கு அருகிலேயே தொழிற்சாலை மற்றும் உந்து சக்தி பூங்கா ஆகியவை அமைக்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக டிட்கோ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu