சர்வதேச விண்வெளி நிலையத்தில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ 5 திட்டத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்து வந்தனர். தற்போது, 5 மாதங்களுக்கு பின்னர், அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2:20 மணிக்கு, ஸ்பேஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறியது. நாசா விஞ்ஞானிகள் ஜோஷ் காசண்டா, நிக்கோல் மான், ரஷ்ய விண்வெளி வீரர் அண்ணா கிக்கினா, ஜப்பான் விண்வெளி வீரர் கொய்ச்சி வாக்காடா ஆகியோர் பூமி திரும்புகின்றனர். கடந்த மார்ச் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கிளம்புவதாக இருந்தது. ஆனால், சாதகமான வானிலை இல்லாததால், திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று அவர்கள் கிளம்பி உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளி வீரர்கள் பூமிக்கு வரும் நிகழ்வு, நேரலையாக நாசாவின் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இது இன்று இரவு 8 மணி அளவில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.