நாசா - ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 6 திட்டம் பிப்ரவரி 27 க்கு ஒத்திவைப்பு

February 22, 2023

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. இது, வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை க்ரூ 6 திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட இருந்தது. இந்நிலையில், இந்தத் திட்டம் 24 மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய வேண்டி இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய புதிய அறிவிப்பு படி, பிப்ரவரி […]

அமெரிக்க விண்வெளி நிலையமான நாசா மற்றும் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, 4 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டிருந்தது. இது, வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலை க்ரூ 6 திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட இருந்தது. இந்நிலையில், இந்தத் திட்டம் 24 மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்ய வேண்டி இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய அறிவிப்பு படி, பிப்ரவரி 27ஆம் தேதி, திங்கட்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு,க்ரூ 6 விண்கலம் ஏவப்படும் என்று தெரியவந்துள்ளது. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தத் திட்டத்தின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் சுல்தான் அல் நீயாடி, ரஷ்யாவின் அன்ட்ரே பெடியே, நாசாவின் ஸ்டீபன் பௌவன் மற்றும் வுட்டன் ஹோபர்க் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். இவர்கள் 6 மாத காலத்திற்கு அங்கு தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu