புளோரிடா கடற்கரையில் மோசமான வானிலை நிலவுவதால், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பும் க்ரூ-8 மிஷன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த இந்த மிஷன், புதிய தேதி நிர்ணயிக்கப்படும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த வானிலை அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மில்டன் சூறாவளி காரணமாக இந்த மிஷன் ஏற்கனவே தாமதமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் 3, 2024 அன்று விண்ணில் செலுத்தப்பட்ட க்ரூ-8க்கு மாற்றாக, க்ரூ-9 செப்டம்பர் 29 அன்று விண்வெளி நிலையத்தை அடைந்தது. அதன்படி, மத்தியூ டோமினிக், மைக்கேல் பாராட், ஜெனெட் எப்பஸ் மற்றும் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகியோர் கொண்ட க்ரூ-8 குழுவினர் விரைவில் பூமி திரும்புவார்கள்.