ஸ்பேஸ் எக்ஸ், ஆகஸ்ட் 20 அன்று, 22 ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிறுவியது. புதிய ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் இது மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃப்ளோரிடாவின் கேப் கனவேரல் ஏவுதளத்தில் இருந்து EST நேரப்படி காலை 9:20 (GMT 1320) மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. இது, அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஸ்பேஸ் எக்ஸின் ட்ரோன் கப்பலான "ஏ ஷார்ட்ஃபால் ஆஃப் கிராவிடாஸ்" மீது சுமார் 8 நிமிடங்களுக்குப் பிறகு வெற்றிகரமாக தரையிறங்கியது. மேலும், செயற்கை கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, செயற்கைகோள் எண்ணிக்கை 6800 ஐ தாண்டியுள்ளது.