ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் என்ற பெயரில் மிகப்பெரிய செயற்கைக்கோள் கூட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அண்மையில், புதிதாக 23 செயற்கைக்கோள்களை இந்த இணைப்பில் சேர்த்துள்ளது.
கடந்த மே 6ம் தேதி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் 23 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. இது நிகழாண்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் 46 வது விண்வெளி திட்டமாகும். ஃப்ளோரிடா ராக்கெட் ஏவு தளத்திலிருந்து புறப்பட்டு 8 நிமிடங்கள் கழித்து பால்கன் 9 ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் பூமிக்கு திரும்பியது. ராக்கெட் ஏவப்பட்ட 65 நிமிடங்களில் 23 செயற்கை கோள்களும் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.