7 வது ஸ்டார்ஷிப் சோதனைக்கான சூப்பர் ஹெவி பூஸ்டர் பரிசோதனை வெற்றி

December 10, 2024

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட் ஸ்டார்ஷிப் விரைவில் 7வது முறையாக சோதிக்கப்பட உள்ளது. ஜனவரி 11, 2025 அன்று சோதனை ஏவுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டின் கீழ்ப்பகுதியான சூப்பர் ஹெவி, 33 இன்ஜின்களை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்களை சோதிக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. ஸ்டார்ஷிப் ராக்கெட், நாசாவின் சந்திரன் செல்லும் ராக்கெட்டை விட இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது. இதுவரை ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆறு முறை […]

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட் ஸ்டார்ஷிப் விரைவில் 7வது முறையாக சோதிக்கப்பட உள்ளது. ஜனவரி 11, 2025 அன்று சோதனை ஏவுதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டின் கீழ்ப்பகுதியான சூப்பர் ஹெவி, 33 இன்ஜின்களை கொண்டுள்ளது. இந்த இன்ஜின்களை சோதிக்கும் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஸ்டார்ஷிப் ராக்கெட், நாசாவின் சந்திரன் செல்லும் ராக்கெட்டை விட இரண்டு மடங்கு சக்தி வாய்ந்தது. இதுவரை ஸ்டார்ஷிப் ராக்கெட் ஆறு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. கடைசியாக நடந்த சோதனையில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த முறை அனைத்து தவறுகளையும் சரி செய்து, ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவ திட்டமிட்டுள்ளது. ஸ்டார்ஷிப் ராக்கெட் வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் முக்கிய பங்கு வகிக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu