தமிழகத்தில் 114 அரசு பள்ளிகளுக்கு சிறப்பு விருது

December 2, 2022

தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட 114 அரசு பள்ளிகள் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாநிலம் முழுதும் 38 மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 114 தொடக்க பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகள் உள்கட்டமைப்பு வசதி, கணினி வழி கல்வி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. […]

தமிழகத்தில் தொடக்க கல்வியில் சிறப்பாக செயல்பட்ட 114 அரசு பள்ளிகள் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும். நடப்பு கல்வி ஆண்டில், மாநிலம் முழுதும் 38 மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 114 தொடக்க பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருதுகள் உள்கட்டமைப்பு வசதி, கணினி வழி கல்வி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த விருது வழங்கும் விழா சென்னையில் நாளை நடக்கிறது. பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் விருதுகளை வழங்குகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu