தாம்பரம் சந்திராகாட்சி இடையே சத் பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து நாளை மற்றும் நவம்பர் 22 ஆம் தேதி அதி விரைவு சிறப்பு ரயில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் இரவு 8. 45 மணிக்கு சந்திராகட்சி சென்றடையும். இது மறு மார்க்கமாக நவம்பர் 16,23ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு சந்திரா காட்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் 18,25ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இதே போல தாம்பரத்திலிருந்து இன்று மதியம் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் நாளை காலை 9:55 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும். இதன் மறுமார்க்கமாக புவனேஸ்வரில் இருந்து நாளை மற்றும் 22ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் 12 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.