நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி டி-2 ரக ராக்கெட்  -  இஸ்ரோ 

February 9, 2023

எஸ்.எஸ்.எல்.வி. -2 ரக ராக்கெட்டை நாளை காலை விண்ணில் இஸ்‌ரோ செலுத்துகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் , சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியாமல் போனது. இதனையடுத்து இஸ்ரோ […]

எஸ்.எஸ்.எல்.வி. -2 ரக ராக்கெட்டை நாளை காலை விண்ணில் இஸ்‌ரோ செலுத்துகிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் , சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி-01 ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்கில் நிலைநிறுத்த முடியாமல் போனது.

இதனையடுத்து இஸ்ரோ மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி.-2 ரக ராக்கெட்டை வடிவமைத்தது. எஸ்.எஸ்.எல்.வி. -2 ரக ராக்கெட்டை நாளை காலை 9.18 மணிக்கு விண்ணில் இஸ்‌ரோ செலுத்துகிறது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் ஆசாதி சாட்-2, ஜானஸ்-1 செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்வதாக தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu